பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடியுமென உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் 2 ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் என்ன படிக்கலாம் என்ற தேடுதலில் இருக்கின்றனர். இந்தச் சூழலில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் எப்போது தொடங்குமென்ற கேள்வி மாணவ, மாணவிகள் மத்தியிலும், பெற்றொர்கள் மத்தியிலும் இருந்தது. இந்தச் சூழலில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடந்துகொண்டிருக்கிற கலந்தாய்வை கொஞ்சம் நீட்டிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்திருந்தோம்.
இப்போது ஆகஸ்ட் 22ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குவதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நீட் தேர்வு எழுதி தேர்வாகின்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வை ஏற்கனவே தள்ளிவைத்திருந்தோம். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே அந்த நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சமூகநீதியின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம். சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றார்.
மேலும் படிக்க | ஆடித்தபசு திருவிழா: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் தேரோட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ