IAS Transfer: உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்... வெளிநாடு பயணத்திற்கு முன் ஸ்டாலின் அதிரடி
TN IAS Transfer: முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த உதயசந்திரன், ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரின் துறைகள் மாற்றம் செய்து அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TN IAS Transfer: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் அரசியல் சூழலில் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளின் துறை மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த உதயசந்திரன் ஐஏஎஸ் தற்போது நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபத்தில், உதயசந்திரன் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாக, மாநில கல்விக்கொள்கை குழுவின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் ஜவஹர் நேசன் குற்றஞ்சாட்டியிருந்தார். அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த வகையில், இந்த ஐஏஎஸ் மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. zeenews.india.com/tamil/videos/jawahar-nesan-left-from-state-education-policy-committee-443715
ககன்தீப் சிங், அமுதா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகளும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐஏஎஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் குறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?
- நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் தனி செயலாளராக நியமனம்.
- முதலமைச்சரின் தனி செயலாளராக பணியாற்றிய உதயசந்திரன், நிதித் துறை செயலாளராக நியமனம்.
- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம்.
- மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக இருந்த செந்தில் குமார், ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமனம்.
-ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஆக இருந்த பி அமுதா, உள்துறை செயலாளராக மாற்றம்.
- போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணீந்தர ரெட்டி நியமனம். இவர் , உள்துறை செயலாளராக இருந்தார்.
- பொதுப்பணித்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன், சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலை துறை செயலாளராக நியமனம்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த நந்தகுமார், மனிதவள வேளாண்மை செயலாளர் ஆக நியமனம். மேலும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு யாரும் நியமனம் செய்யப்படவில்லை
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக டி. ஜெகநாதன் நியமனம்
- சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம். இவர் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார்.
- பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம். இவர் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலை துறை செயலாளராக நியமனம்.
அமைச்சரவை மாற்றத்திற்கு பின்...
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகள் கடந்த மே 7ஆம் தேதி நிறைவடைந்தது. அந்த வகையில், தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதாவது, இந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல் அமைச்சர் அவர்தான்.
மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு தொழில் துறை வழங்கப்பட்டது. தொடர்ந்து, நிதி அமைச்சராக இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு பால்வளத்துறையும், தொழில் துறையை தன் வசம் வைத்திருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும் வழங்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின் உடனே இந்த ஐஏஎஸ் மாற்றம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ