கும்பகோணம்: இடிந்து விழுந்த ராட்சத பாலம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலாளர்கள்
கும்பகோணம் அருகே 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ராட்சத பாலம் இடிந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் ஆற்றில் குதித்து உயிர்தப்பியுள்ளனர்.
தஞ்சை - விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பல பிரிவுகளாக நடைபெறும் இந்த சாலைப் பணியில் முதல் கட்டமாக விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தென்பெண்ணை, கெடிலம் உள்ளிட்ட 26 ஆற்றுப்பாலங்கள், 27 சாலை மேம்பாலங்கள் ,3 ரெயில்வே மேம்பாலங்கள் , 2 கனரக வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்படுகின்றன.
ALSO READ | பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த பேருந்தில் தீடீர் தீ விபத்து!
2-வது பிரிவில் சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரையிலான பணிகள் நடைபெறுகின்றன. இதில் மீன் சுருட்டி ,குமாரக்குடி உட்பட 23 இடங்களில் மேம்பாலங்களும் ,ஒரு சுங்கச்சாவடியும் கட்டப்படுகின்றன. 3-வது பிரிவில் சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான பணிகள் நடைபெறுகின்றன. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 22 இடங்களில் ஆற்றுப்பாலங்கள் 20 இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தஞ்சையிலிருந்து விக்கிரவாண்டி வரையிலான பயண நேரம் 5 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகவும் குறையும் என கூறப்படுகிறது. இந்த பணிகளில் ஒன்றாக கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராட்சத பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 70 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்றிரவு பாலத்தின் மையப்பகுதியை தூக்கி வைக்க முற்பட்டுள்ளனர்.
ALSO READ | குடியிருப்புகளின் அருகே தந்திரமாக சுற்றித்திரியும் சிறுத்தைகள், கரடிகள்: Watch
ராட்சத கிரேன்கள் மூலம் தூண்கள் தூக்கிவைக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடும்போது, திடீரென தூண்களின் பாரத்தை தாங்க முடியாமல் கான்கிரீட் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. ஆபத்தை உணர்ந்த தொழிலாளர்கள் நொடிப்பொழுதில் ஆற்றுக்குள் குதித்து தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR