TN Governor Delhi Visit: தற்போது மக்களவை தேர்தல் சார்ந்த பரபரப்பு அரசியல் தளத்தில் சூடுபறந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை தற்போதே தொடங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் இதே பரபரப்பு நீடிக்கும் நிலையில், தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்களவை தேர்தலுக்கு முன் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே உச்சக்கட்ட பரபரப்பு காட்சிகள் அரங்கேறின எனலாம். 


ஆளுநரின் செயல்


ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வாடிக்கை என்பதால் பிப். 12ஆம் தேதி அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பத்திகளில் தனக்கு உண்மை மற்றும் தார்மீக ரீதியாக உடன்பாடு இல்லை என கூறி அந்த உரையை புறக்கணித்தார். மேலும், தேசிய கீதத்தை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என தனது அதிருப்தியையும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.


மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?


இதனையடுத்து, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையின் தமிழாகத்தை அவையில் வாசித்தார். மேலும், அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழாக்கம் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகனால் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் அவையில் நிறைவேற்றப்பட்டது. 


முதலமைச்சர் அதிருப்தி


சபாநாயகர் அப்பாவு ஆளுநரை நோக்கி சில கேள்விகளையும் மறைமுகமாக கேட்க, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். குறிப்பாக, கடந்தாண்டை போலவே இந்தாண்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார். சபாநாயகர் அப்பாவு மீது அதிருப்தி தெரிவித்து ஆளுநர் ரவி அன்று மாலை அறிக்கையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த பேச்சுக்கள் அனைத்தும் சட்டப்பேரவையின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து, ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசுகையில் முதல்வர்,"நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சிறு பிள்ளை விளையாட்டுகளுக்கு நான் பயப்பட மாட்டேன்" என ஆளுநரின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தார். 


இன்றிரவு டெல்லி பயணம்


தொடர்ந்து, அரசியல் பரபரப்பு நிலவி வரும் சூழலில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதிலும், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி பற்றாக்குறை, மெட்ரோவுக்கு போதிய நிதி ஒதுக்காதது ஆகிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. 


இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. 


சமீபத்தில், சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை, ஆளுநர் ரவி வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போதைய ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. 


மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வெளியாகியுள்ள சூப்பர் அறிவிப்புகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ