Actor Vijay Latest News Updates: தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் எப்போதும் நெருக்கம் உண்டு. திரைத்துறையில் இருந்து பலரும் அரசியலுக்கு வந்தது உண்டு. சிலர் தனி கட்சியும் ஆரம்பித்திருக்கிறார்கள், சிலர் இருக்கக்கூடிய கட்சிகள் இணைந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆளுமைகளாக விளங்கிய அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோரை தவிர பெரும்பாலானோர் தோல்வியை மட்டுமே சந்தித்து காணாமல் போயிருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜயகாந்துக்கு பிறகாக நடிகர் கமல் தொடங்கிய கட்சி தொடர் தோல்வியின் காரணமாக பல முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு சென்று விட்ட நிலையில், எப்போதும் தனித்து போட்டி என ஆரம்பித்த கட்சி இன்று திமுக கூட்டணியில் வந்து இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி தொடங்கிய அடுத்த நாளே அவரும் தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் இருந்து விலகிச் சென்றார். 


நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி


இதன் பின்பு தான் அரசியல் வெளிச்சம் என்பது நடிகர் விஜய் (Actor Vijay) மீது விழத் தொடங்கியது. அவரும் அவர் பங்குக்கு நடிக்கக்கூடிய திரைப்படங்களில் அரசியல் சார்புடைய பாடல் வரிகள், வசனங்கள் என ஒவ்வொரு படத்திலும் அதிகப்படுத்தி வந்தார். தொடர்ந்து, அவர் ரசிகர்களின் நற்பணி மன்றங்களை ஒன்றிணைத்து பல ஆண்டுகளாக விஜய மக்கள் இயக்கம் என்ற அமைப்பில் தொடர்ந்து பல நலத்திட்டங்களை மேற்கொண்டனர். குறிப்பாக கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக சிலர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது, அந்த இயக்கத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்தார்.


மேலும் படிக்க | லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வீடுகள் எனக்காக திறந்திருக்கும்... எமோஷன் ஆன ராகுல் காந்தி!


இந்த நிலையில் தான், கடந்த பிப். 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தை (Tamilaga Vetri Kazhagam) தொடங்கினார் நடிகர் விஜய். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் (Lok Sabha Election 2024) போட்டியிடவில்லை என அறிவித்த விஜய், அடுத்த 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு" என அறிவித்தார். விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை கடந்த மார்ச் மாதம் துவங்கிய நிலையில் குறுகிய காலத்தில் 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். 


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்


இந்நிலையில் நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுவதில்லை என அறிவிக்கப்பட்டதால் எந்த கட்சிக்கும் ஆதரவாக நிர்வாகிகள் தேர்தல் பணி செய்யக்கூடாது இப்படி மீறி செயல்பட்டால் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என புஸ்ஸி ஆனந்த் எச்சரித்து இருக்கிறார். அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் யாரேனும் தங்களது பெயரையோ பயன்படுத்தினால் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் (Vikravandi Assembly Constituency) திமுக உறுப்பினர் புகழேந்தி சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால், அத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


நாடாளுமன்ற தொகுதியோ, சட்டமன்ற தொகுதியோ காலியாகும்பட்சத்தில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதியாக இருப்பதால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு கட்டத்தில் நடத்தப்பட வேண்டும் அல்லது வேறு ஒரு தேதியில் கட்டாயம் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


விஜயின் ரகசிய உத்தரவு


கட்சி ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்த விஜயின் தமிழக வெற்றிக் கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் விக்கிரவாண்டி தொகுதி தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் இடைத்தேர்தலுக்கு தயாராகுமாறும் ரகசிய உத்தரவு அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இருந்து சொல்லப்பட்டிருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் (Vikravandi Assembly By Election) மூலம் தனது அரசியல் எதிர்காலத்தை பார்க்க விஜய் துணிந்துவிட்டதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சிலர் ஆமோதித்தும், மறுத்தும் வருகின்றனர்.


மேலும் படிக்க | அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள்: அண்ணாமலை ஆரூடம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ