OPS Seat Changed In TN Assembly: 2024ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாள் அன்று ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதற்காக ஆளுநர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தாலும், அரசு தயாரித்து கொடுத்து உரையை முழுமையாக புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான சூழலை உண்டாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், ஆளுநர் சட்டப்பேரவையில் கூறிய அவரது சொந்த கருத்துகள், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசிய கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மேலும், ஆளுநர் வாசிக்காத அரசு தயாரித்து கொடுத்த உரை அவைக்குறிப்பில் இடம்பெற தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. 


இரண்டாம் நாளான நேற்று மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கேள்வி நேரம் நிகழ்வு நேற்று நடைபெற்றது.


மேலும் படிக்க | கிளாம்பாக்கம் பிரச்னை: சூடான சேகர்பாபு... குறுக்கிட்ட இபிஎஸ்... விவாதத்தை முடித்த ஸ்டாலின்!


இன்று 2 தனித் தீர்மானங்கள்


மூன்றாம் நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தனித் தீர்மானங்களை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது எனவும், 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் 2 தனித் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கொண்டு வர உள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்திற்கு இரண்டாவது வரிசையில் முன்னாள் பேரவை தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.


இபிஎஸ் கோரிக்கை... நிறைவேற்றிய ஸ்டாலின் 


தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் முறையிட்டு வந்தனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி,"எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை ஒதுக்கி தருமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதனை  நிறைவேற்றி தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்" என கோரிக்கை வைத்தார். 



இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "எதிர்கட்சி தலைவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என தெரிவித்து அமர்ந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் ஜாமின்? இன்று மீண்டும் விசாரணை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ