Case Against BJP Annamalai: வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில், கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது யார்? தமிழக அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊறுக்கு செல்ல காரணம் திமுக தான் என குற்றம்சாட்டியிருந்தார். திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றால் தான் வட மாநிலத்தவர்க்ள் மீதான வெறுப்பு எழுந்தது என்று அதில் அவர் குறிப்பிடிருந்தார். 


மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி வருவதாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதேபோல, பிகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கு போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும் ட்விட்டர் கணக்கை முடக்கவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக சென்னை சைபர் கரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இந்த வதந்தி குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


மேலும், பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது, தன் மீதான வழக்கு குறித்து அண்ணாமலை ட்விட்டரில் ஸ்டாலினின் பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.



அதில், "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.  அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ