வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்..பின்னணி என்ன?

கோவை சிட்கோ பகுதியில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் வடமாநில தொழிலாளர்களை கோவை fவடமாநில இளைஞர்களைமாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சந்தித்தனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 4, 2023, 10:00 PM IST
  • வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.
  • தொழிலாளர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்
வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்..பின்னணி என்ன? title=

கோவை சிட்கோ பகுதியில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் வடமாநில தொழிலாளர்களை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்தனர். மேலும் ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா தேவைகள் உள்ளதா எனவும் கேட்டறிந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் மூன்று நிறுவனங்களுடன் வட மாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் என தெரிவித்தார். நேற்று செய்தி அறிக்கை கொடுத்தபடி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்களால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர் என தெரிவித்த அவர் அது தவறான தகவல் எனவும் எந்த ஒரு அச்சுறுத்திலும் வேண்டாம் என கூறியதாக தெரிவித்தார். மேலும் செய்தி அறிக்கையை ஹிந்தியில் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ஹிந்தியில் பேசும் அதிகாரிகளையும் அந்தந்த பகுதியில் போட்டுள்ளோம் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்? - புரளிக்கு முற்றுப்புள்ளி... பட்டியல் போட்ட ஸ்டாலின்

வட மாநிலத்தவர்கள் அந்த வீடியோ போட்டோஸ் இதனால்தான் அதிகமாக அச்சமடைந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் ரயில் நிலையத்திலும் போலீசாருக்கு இது போன்ற தகவலை கொடுத்துள்ளோம் என்ன தெரிவித்தார்.

வாட்ஸ் அப் வீடியோக்கள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் வடமாநிலத்த தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லை என வதந்திகளை பொய்யான வதந்திகளை தவறான பொய்யான வீடியோக்கள் மூலமாக பரப்பி கொண்டவர்கள் மீது கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் கோவை மாநகரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மெயின் ஸ்ட்ரீம் வீடியோ செய்தி வந்ததாக கொடுத்துள்ளார்கள் என கூறிய அவர் தவறான செய்தி மீதான நடவடிக்கையாக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது என கூறினார். மேலும் போலீசார் பீகார் பகுதிக்கு சென்றுள்ளார்கள் எனவும் தெரிவித்த அவர் அதன் உண்மை தன்மையை குறித்து என ஆய்வு செய்ய உள்ளார்கள் என்றார். 

வீடியோவில் மாபிங் செய்து தவறான தகவல் பரப்பி வருகிறார்கள் என கூறிய அவர் தவறான தகவல்களை பரப்பவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். இனிமேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஹிந்தி மொழி பேசும் காவலர்களை பணியில் அமர்த்தி, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என கூறினார். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது எந்த பிரச்சினையும் இல்லை வட மாநில தொழிலாளர்கள் நம்முடைய விருந்தினர்கள் என்ற செய்தியை முழுமையாக பரப்பி வருகிறோம் என்றார். மேலும் ஐடி ஆக்ட் மூலம் மூன்று வருட தண்டனை கிடைக்கும் என்றார். ரோந்து பணிகளையும் அதிகப்படுத்தியுள்ளோம் எனவும் நகரம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இரண்டு பேட்ரோல் வாகனம் இரண்டு சக்கர வாகனத்திலும் ரோந்து பணிகள் செய்யப்படுகிறது என்றார். 99% எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார்கள் ஆனால் தவறான செய்தி காரணமாக அச்சமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை: வானதி சீனிவாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News