அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.  சில வாரங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பம் முதலே மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியது தான் காரணம் என கூறி மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் தொடர்ந்து  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில்  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த மரணம் தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாணவி லாவண்யா விவகாரத்தில் மதமாற்ற குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி நிர்வாகம்


மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் மாணவியின் தற்கொலை தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீடு அமைத்திருக்கும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், தடையை மீறி நுழைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். 


இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களை  காவல்துறையினர் கைது செய்து, சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்திய அனைவரையும் இழுத்துச்சென்று வேனில் ஏற்றினர். வேனில் ஏற்றப்பட்ட அவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர். இதுவரை எப்பொழுதும் போல இப்படி மண்டபத்தில் வைக்கப்படுபவர்கள் மாலை விடுவிப்பதுதான் வழக்கம், அதே போன்ற நடைமுறைதான் பின்பற்றப்படும் என நினைத்திருந்த ஏபிவிபி அமைப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது காவல்துறை. பாஜக மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாக காவல்துறை தெரிவித்தததை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 


மேலும் படிக்க | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!


மாணவர் அமைப்பினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போலீசார் சைதாப்பேட்டை 18 வது குற்றவியல் நீதிபதி சுப்பிரமணியன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும்  ஆஜர்படுத்தினர். அரசுத்தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எட்வின் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆர்பாட்டத்திற்கு அனுமதி எதுவும் வழங்குவது இல்லை. அவ்வாறு இருக்கும்போது தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது மாணவர்களே என்றாலும் குற்றம் தான் என வாதிட்டத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 32 பேரில் 3 சிறார்களைத் தவிர 29 பேறையும் வருகின்ற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவுவிட்டார்.


மேலும் படிக்க | போராட்டத்தில் ஈடுபட்ட எச். ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR