அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் - தொல். திருமாவளவன்!
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் என வி.சி.க.தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் முப்பெரும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா மற்றும் சனாதள எதிர்ப்பு பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கோவை சாலையில் உள்ள சக்தி ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அவர் கூறியது, கிருஷ்ணகிரி மாவட்டம் அருள நிதியில் ஆவண கொலை நடைபெற்றது, இது தாய் மகன் தூங்கும் பொழுது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர், சாதி மனிதனை ஆட்டிப்படைக்கிறது, இதில் காயம் அடைந்த அனுசியா என்ற தலித் பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க | 'மீனவர்களுக்காக என் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும்' - ஆளுநர் ஆர்.என்.ரவி
இதை கண்டித்து எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆவண படுகொலை சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்த பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த ஒன்றிய அரசின் முடிவு 4 மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் அதை பின்பற்றுகிறது. அதை உள்நோக்கத்துடன் செயல்படுத்துவது ஆபத்தானது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியல் இல்லை, அதுசொத்து பட்டியல். தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்களது சொத்து கணக்குகளை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைப்பார்கள்.
அதை திருடி பொய்யான தகவலை பரப்பி உள்ளார். ஊடகங்களில் தான் இருக்க வேண்டும், தன்னை பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என உள்நோக்கத்துடன் அவதூறுகள் வதந்தி பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறார், ஒட்டுமொத்தத்தில் அரசியலில் அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னராக மாறியுள்ளார் என பேட்டி அளித்தார், பேட்டியின் போது முகத்தில் கை வைத்து கொட்டாவி விட்டு பேட்டி அளித்தது சுற்றியுள்ள கட்சியினர் செய்வது அறியாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ