அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பணம்? சோதனை செய்த அதிகாரிகள்!

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் மக்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் வைத்துள்ளதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2023, 03:56 PM IST
  • மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்.
  • பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்.
அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பணம்? சோதனை செய்த அதிகாரிகள்! title=

மே 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலின் பாஜக தரப்பு இணை பொறுப்பாளராக அண்ணாமலை உள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும், அதனை உடுப்பி தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் தரப்பினர் குற்றஞ்சாட்டினர். காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் புகார் கூறியதன் அடிப்படையில் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து பேசி உள்ள வினய்குமார், ‘எனக்கு வந்துள்ள தகவலின்படி அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். காவல் துறையினரிடமும் புகார் அளித்துள்ளேன். எனக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்’ என்றார்.

மேலும் படிக்க | கூட்டுறவு வங்கிகள் மூலம் இத்தனை கோடி கடனா? வெளியான அதிர்ச்சி தகவல்!

இதுகுறித்து உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாமலை திங்கள்கிழமை காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி சென்றார். ஹெலிகாப்டர் மற்றும் அவர் எடுத்துச் சென்ற பையை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில் நடத்தை விதிகளை மீறும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஹோட்டலிலிருந்து உடுப்பி மாவட்டம், கப்பு தொகுதி செல்லும் வழியில் எஸ்எஸ்டி குழுவினர், உத்யாவர் சோதனைச் சாவடியில் மீண்டும் சோதனை நடத்தினர். மதியம் 2 மணியளவில் கடையாலி அருகே உள்ள ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கு அண்ணாமலை வந்தடைந்தார், ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடுப்பியில் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் பெரும் தொகையை கொண்டு வந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டியதை அடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.  இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை ‘எல்லோரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களைப் போலவே கருதுகிறார்கள். நான் சாமானியன். எங்களுடைய கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு. காலவிரயத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்’ என்றார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த முத்திரை தாள் கட்டணம்! இவ்வளவு உயர்வா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News