Tamil Nadu Crime News Latest Updates: சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம், ஜெயா நகரை சேர்ந்த 36 வயதுடைய சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இளம் வயதில் கணவரை இழந்த நிலையில் இவர் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு சுமதி வீட்டின் அருகில் இடம் பார்க்க வந்த சிவகுமார் என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டுலள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சிவகுமார் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியில் மாவட்ட தலைவராக உள்ளதாக புகார் அளித்த அவரது மனைவி சுமதி தெரிவித்தார். கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் சிவகுமார் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவில் இருப்பது சமீபத்தில் தெரிந்ததாகவும், பின்பு அதை பற்றி கேட்டதால் இருவருக்கிடையே வீட்டில் அடிக்கடி பிரச்சனை எழுந்ததாகவும் தெரிகிறது. இந்த பிரச்சனை முடிக்க பாஜக பிரமுகர் சிவக்குமார், அவரது மனைவியை கடத்த திட்டம் தீட்டி அதற்கு அவரது நண்பர்களை அழைத்துள்ளார். 


தீடீரென குவிந்த 13 பேர் 


இந்நிலையில் நேற்று முன்தினம் (செப். 28) மாலை சுமதி அவரது இளைய மகன், அவரது தாய் ஆகியோருடன் திருநீர்மலை கோயிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். சுமதி வீட்டின் வெளியே கார் வந்து நின்றதும் காரை விட்டு கிழே இறங்குவதற்குள் மற்றொரு காரில் வந்த சுமதியின் கணவர் பாஜக பிரமுகர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுமதியிடம் கையெழுத்து போட சொல்லி மிரட்டியதாகவும், அப்பொழுது 11ம் வகுப்பு படிக்கும் சுமதியின் இளைய மகன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியபடி காரில் இருந்து இறக்கி பாஜக பிரமுகர் வந்த காரிற்கு அழைத்து சென்று முதலில் செல்போனை பறிந்ததாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தவெக கட்சி கொடிக்கு எழுந்த பெரிய ஆபத்து நீங்கியது - தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்


மேலும் சம்பவ இடத்திற்கு மற்றொரு வாடகை காரில் மூன்று பேர், மற்றொரு ஆட்டோவில் நான்கு பேர், ஒரு பைக்கில் ஒருவர் என 13 ஆண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் ஆகும். சிவக்குமாரின் கண்முன்னே அவரது ஆதரவாளர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்தவாறு அவரது மனைவியின் கையை பிடித்து இழுத்து செல்வதும், பெண் என்றும் பாராமல் அவர் அணிந்து இருந்து ஆடையில் உள்ள பாக்கெட்டில் கையை விட்டு செல்போன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. சுமிதியை சாலையில் உள்ள சகதியில் கிழே தள்ளி அவர் வைத்திருந்த கைப்பையை கத்தி முனையில் பிடுங்கியுள்ளனர். 


சுற்றிவளைத்த போலீசார்


சுமதியிடம் இருந்து கைப்பை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்த பின்னர், அவரை சிவக்குமார் ஆதரவாளர்கள் தாக்கி கடத்தி சென்றுள்ளனர்.  இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பெரும்பாக்கம் போலீசார் பெண்ணை கடத்திய கும்பலை சென்னை பள்ளிக்காரணை அருகே மடக்கி பிடித்து கடத்தப்பட்ட சுமதி, மற்றும் மகன் ஆகியோரை மீட்டனர். 


பின்னர் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து சென்ற பெரும்பாக்கம் ஆய்வாளர் சண்முகம் விசாரித்தபோது பாஜக பிரமுகரான சிவக்குமாருக்கும் அவரது மனைவி சுமதிக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியையே கடத்தி கத்தி முனையில் மிரட்டி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்க முயற்சித்தது, அதன்பின்னர் தான் போலீசார் தங்களை பிடித்ததாகவும் பாஜக பிரமுகரும், புகார் அளித்த பெண்ணின் கணவருமான சிவக்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார்.


மனைவி கூறுவது என்ன?


பின்னர் கணவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வழக்குப்பதிவு செய்ய மறுத்து மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு போ என தன்னை மிரட்டியதாக பாதிக்கபட்ட பெண் சுமதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கிடைக்க சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். 


அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, "எனது கணவர் முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது தெரிந்தும் 14 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டு அவரோடு வாழ்ந்து வந்தேன், இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் தன்னை வேண்டாமென்று கூறி விரட்டியடித்ததால், அவரை விட்டு செல்ல முடிவெடுத்து நான் அவருக்கு தொழில் செய்ய கொடுத்த 90 லட்சம் ரூபாய், 500 கிராம் தங்க நகை, உள்ளிட்டவற்றை திருப்பி தரவேண்டும் என  கேட்டேன்.


மேலும் இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தோம், அதனுடைய பங்கையும் கொடுக்க வேண்டும் என கேட்டேன். மேலும் என்னை கடத்திச் சென்ற போது எடுத்துச் சென்ற 5 சவரன் தங்க நகை, கார் மற்றும் நான் கொடுத்த பணம், எனது அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும். அலுவலகத்தில் இருந்து மாதாமாதம் வரும் சம்பளம் கடந்த மூன்று மாதமாக வரவில்லை. இதனை மீட்டுத் தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார். 


இதனையடுத்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்படும் போது 10க்கும் மேற்பட்டோர் பெண்ணை தாக்கி அடித்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது - உஷார் மக்களே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ