ஊராட்சி வார்டு தேர்தல்: கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு தேர்தலில் திமு, அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்த வார்டில் நடைபெற்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் ஆரம்பமான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தற்போதைய நிலவரப்படி, திமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதேநேரத்தில் எதிர்கட்சியான அதிமுக எதிர்பார்த்த அளவுக்கு முன்னிலை பெறவில்லை. அதுவும் நாதக, மநீம, தேமுதிக உட்பட சில கட்சிகள் இதுவரை ஒரு இடத்தில் கூட தங்கள் கணக்கை தொடங்கவில்லை.


தேர்தல் என்றாலே, பல சுவாரசியங்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோன்ற ஒரு சம்பவம் குருடம்பாளையம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டில் அரங்கேறியுள்ளது.


ALSO READ | TN Local Body Election Results 2021 LIVE: திமுக தொடர்ந்து முன்னிலை


அதாவது  கோவை குருடம்பாளையம் ஊராட்சி வார்டு தேர்தலில்  திமுக சார்பில் அருள்ராஜ், அதிமு சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக் மற்றும் சுயேட்சை வேட்பாளர் களம் கண்டனர்.


இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த இடத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட ஜெயராஜ் 240 வாக்கள் பெற்றார். அதிமு சார்பில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் வெறும் 196 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதுவும் அவருடைய ஓட்டாக தான் இருக்கும்.


தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு பெறுவது என்பது இது முதல் முறையல்ல. பல வேட்பாளர்கள் ஒற்றை இலக்குகளிலும், ஒரு ஓட்டுக்கூட பெறாதவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் பாஜக வேட்பாளர் கார்த்திக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்த காரணம் என்னவென்றால், அவரது குடும்பத்தில் மொத்தம் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 


ALSO READ |  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி


ஆனால் அவருக்கு விழுந்தது ஒரே ஒரு ஓட்டு என்பதால், அவரின் குடும்ப உறுப்பினர்களே அவருக்கு ஓட்டு போடாதது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் தனக்கு வாக்களிக்காதது பார்த்து திகைத்து போயுள்ளார் பாஜக வேட்பாளர் கார்த்திக்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR