கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்
செல்வப் பெருந்தகை கமலாலயம் வந்து பார்த்தால் தான் தெரியும், பாஜக எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கடந்த மாதம் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு திரும்பினார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் ஒரே கட்டமாக அதிலும் முதல் கட்டத்திலேயே முடிவுற்றது. இந்த நிலையில் நீலகிரி தொகுதியிலே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகை புரிந்தார்.
சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா என அனைவராலும் அழைக்கப்படும் அவரது அதிஷ்டானத்தில் சங்கராச்சாரியார் சுவாமியை தரிசித்து அங்குள்ள சிறப்புகளை அறிந்து பின்பு சங்கர மடத்தின் பிடாதிபதியாக விளங்கக்கூடிய விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற அவர், பின்னர் இருவது உடனான தனிமை சந்திப்பு சுமார் 45 நிமிடங்களுத்கு மேலாக நடந்தேறியது.
இதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் இரண்டு வருடங்கள் வெளி மாநிலங்களுக்கு யாத்திரை சென்று தற்போது தமிழகம் திரும்பி உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணி காரணமாக என்னால் வரமுடியாமல் போனதாகவும் இதனால் தற்போது வந்திருந்து அவரிடம் ஆசி பெற்று உலக நன்மைக்காகவும், பொதுமக்களின் நன்மைக்காகவும் இந்த தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளை வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டது ஒன்று எனவும், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராவது உறுதி செய்யப்பட்டது ஒன்று என தெரிவித்தார்.
மேலும் எலக்சன் கமிஷன் தேர்தலை நேர்மையாக நடத்தி வருவதாகவும், எலக்சன் கமிஷன் ஒரு பாராமல் இருந்தால் திமுக எப்படி ஆட்சிக்கு வந்திருக்கும், கர்நாடகாவில் காங்கிரஸ் எப்படி ஆட்சிக்கு வந்து தவறான தகவல்களை அரசியல்வாதிகள் சொல்லக்கூடாது.
எலக்சன் கமிஷன் அவர்களுடைய வேலையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கமலாலயத்தை முற்றுகையிடுவதாக கூறியிருந்தது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பாஜக தலைவர் ஏற்கனவே சொல்லிவிட்டார் அவர்கள் எந்த தேதியில் வருகிறார்கள் என முன்கூட்டியே கூறினால் சாப்பாடு ரெடி பண்ணி வைக்க தயாராக இருக்கிறோம் என தலைவர் கூறியிருக்கிறார் முன்கூட்டியே அவர்கள் தேதி சொன்னால் நல்லா இருக்கும் என்றார்.
அப்போது கமலாலயத்தில் 10 நபர்களாக இருப்பார்களா என செல்வபெருந்தகை நக்கல் அடித்திருந்த நிலையிலே வந்து பார்த்தா தானே தெரியும் பாஜக எந்த அளவுக்கு இன்று வளர்ச்சியை கண்டிருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி அபரிவிதமான வளர்ச்சி என்பது அவர்கள் கமலாலயத்திற்கு வந்தால் தானே தெரியும் என்றார். மேலும் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்து குறித்து கேட்க கட்சியில் இணைந்தவரை வரவேற்கிறேன் என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது, எதிர்பார்க்காத வரலாற்று படைக்கக்கூடிய தேர்தல் ஆக இருக்கப் போகிறது என எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ