பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால்

Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 23, 2024, 06:03 PM IST
பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால் title=

Delhi CM Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றோர்: ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் மோடி அரசுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான குற்றசாட்டுக்களை வைத்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டு மோடி அரசு மீது உணர்ச்சிப்பூர்வமான தாக்குதலை தொடுத்துள்ளார். மோடி அரசாங்கம் அனைத்து வரம்புகளையும் தாண்டி தனது வயதான பெற்றோரை துன்புறுத்தத் தொடங்கியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

அந்த வீடியோவில், எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சமீபத்தில் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார் எனவும், எனது தந்தைக்கு வயதாகி விட்டது. ஆனாலும் அவர்கிடம் மோடி அரசு விசாரித்து வருகிறது. இன்று நீங்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டீர்கள். என்னை உடைக்க நீங்கள் என் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை குறிவைத்தீர்கள். எனது தாயார் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் கைது செய்யப்பட்ட நாள் (மார்ச் 21), அன்று எனது தாயார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனது தந்தைக்கு 85 வயது, அவருக்கு காது கேளாமை பிரச்சனை உள்ளது.

என் பெற்றோர்கள் குற்றவாளிகள் என்று நினைக்கிறீர்களா? என் பெற்றோர் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள்? உங்கள் போராட்டம் என்னுடன் தான்.. என் பெற்றோரை துன்புறுத்தாதீர்கள் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் மற்றும் கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.

மறுபுறம், ராஜ்யசபா எம்பி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றோரிடம் மேற்கொள்ள இருந்த விசாரணையை டெல்லி போலீசார் தள்ளி வைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

மே 13 ஆம் தேதி முதல்வரின் இல்லத்தில் ஆம் ஆத்மி ராஜ்யசபா உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அவரது பெற்றோரை விசாரிக்க, டெல்லி காவல்துறை கெஜ்ரிவாலின் இல்லத்திற்குச் செல்லக்கூடும் என்று தகல்வகள் வெளியாகின. ஏற்கனவே இந்த விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க - மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் கைது

இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோரிடம் விசாரணை நடத்த இன்று (வியாழக்கிழமை) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு டெல்லி போலீஸார் செல்ல மாட்டார்கள் கூறப்பட்டு உள்ளது.

அரவிந்த கெஜ்ரிவால் இல்லத்தில் ராஜ்யசபா எம்பி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த போது அவரது பெற்றோர்கள் அங்கு இருந்தனர் என்பதால், அவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பெற்றோருடன் காணப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது தந்தையின் கையைப் பிடித்தபடியும், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவரின் தாயின் கையைப் பிடித்தபடியும் நடந்து வருவது போல உள்ளது. 

அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், எனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் காவல்துறைக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் எனது பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ள டெல்லி போலீசார் நேரம் கேட்டதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால் டெல்லி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துவார்களா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்க - மோடி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனுக்கு சிறை: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி ப்ரெஸ் மீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News