Press Meet of BJP Leader K.Annamalai: கோவை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பிரதமர் பிரச்சாரம்


பிரதமர் குறுகிய காலத்தில் தமிழக வர உள்ளார். சீமான் தினம் ஒரு வார்த்தை, தத்துவம் என பேசுகிறார். முதல்வர் அப்போ அப்போ தமிழகத்தில் எட்டி பார்க்கிறார். நேரடியாக முதல்வர் களத்திற்கு வராததினால் கொள்ளையடிப்பது மட்டும் முழு வேலையாக அமைச்சர்கள் பார்க்கிறார்கள். பிரதமரின் ரோட்ஷோ முக்கிய நகரத்தில் நடக்க உள்ளது. பிரதமர் உழைக்க கூடிய செயலை தமிழக முதல்வர் செய்யவில்லை.


சீமான் குறித்து அண்ணாமலை விமர்சனம்


டெல்லியில் சீமான் சின்னத்திற்கு அப்பளை செய்யாமல் சின்னம் கிடைக்காததால் கோபத்தில் பேசுகிறார். அவர் தவறு செய்து விட்டு எங்கள் மீது பழி போடுகிறார். பணம் அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர். 2024 ல் பொய் வேஷம் போடுகின்றனர் திமுக .கச்சத்தீவு நாங்கள் கையில் எடுத்த பின்பு மக்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. ஜனநாயக கடமையை செய்துள்ளோம். மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது.


மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்


உதயநிதி குறித்து அண்ணாமலை விமர்சனம்


தந்தை பெயர், தாத்தா பெயர் , வைத்துகொண்டு கொச்சையாக பேசுவது உதயநிதி, தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். ட்ரக்( போதை) உதயநிதி ஸ்டாலின், என நாளையிலிருந்து கூப்பிடுகிறோம். கிராமத்தில், நகரத்தில், சம்பாதித்து டி.ஆர்.பி ராஜாவிற்கு வியர்வை சிந்தி இருக்கா? அவர் அப்படித்தான் பேசுவார். எங்களுக்கு நடிக்க தெரியாது... எல்லா இடங்களிலும் இப்படி தான் பேசுவோம். இலங்கையை பொறுத்தவரை அவர்கள் பிரச்சனை செய்யவில்லை. 2014 வரை துப்பாக்கி சூடு மீனவர்கள் இறந்தார்கள், திமுக எங்கள் மீது பழி சொல்கிறார்கள். கச்சத்தீவு குறித்து ஒரு திமுக அமைச்சர் ஆர்டிஐ ரெக்கார்டினை நாங்கள் தான் அடிச்சோம் என்று சொல்கிறார்கள். 


திமுக பணத்தை வைத்து கொங்கு மண்டலத்தை வென்று விடலாம் என நினைக்கிறார்கள் அது நடக்காது. திருமாவளவன், சீமான், தக்காளி தொக்கா..? தியாகிகளின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், திமுக வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். அவர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஹிந்தி திணித்தது காங்கிரஸ், திமுக நடத்த கூடிய பள்ளியில் ஹிந்தி இல்லை என்று சொல்லுங்கள் என தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.


மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ