திமுகவை விமர்சிக்கும் வட்டத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் சபரீசன். பொதுவெளியில் அவரது முகம் அதிகம் பரிச்சயமில்லை எனினும் திமுகவின் உள்ளும் ,புறமும் பல முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய அளவுக்கு அதிகாரம் படைத்தவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற தகுதி மட்டுமல்லாமல், கட்சிக்குள் பல அதிரடி முடிவுகளிலும் அவரது பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது சபரீசன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லாக் அப் மரணங்கள் இல்லாத நிலையை உருவாக்குங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகம் நடத்துவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடைவிதித்திருக்கும் கோயில் நிர்வாகம், முதல்வரின் மருமகனுக்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தது என பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகம் நடத்துவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் சபரீசன் இரு தினங்களுக்கு முன்பு சிறப்பு யாகம் நடத்தியிருக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற இந்த யாகத்தில் சபரீசன் மற்றும் அவருடன் நண்பரும், தொழிலதிபருமான வெங்கடேசன் ஆகியோரும் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளிக்குகையில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினர். 



இதற்காக, வள்ளிக்குகையில் சிறப்பான பந்தல், அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. அந்த வழியாக பக்தர்கள் யாரையும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சபரீசனின் சிறப்பு யாகம் முடிந்த பின்னர்தான் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட, 3 மணி நேரமாக பக்தர்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மூலவர், உற்சவர் சந்நிதிகளில் சபரீசன் மற்றும் வெங்கட் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். 


இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் மருமகனுக்கு மட்டும் எப்படி கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது என்று பாஜகவினர் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, பாஜகவின் ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஓம்பிரபு, அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக்கிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார். 



யாருடைய அதிகாரத்தில் இதெல்லாம் நடந்தது என்று குரல் உயர்த்திய பாஜகவுக்கு அப்போதுதான் காத்திருந்தது ‘ட்விஸ்ட்’. பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் துணைத் தலைவர் சி.மகேஷ் என்பவர்தான் இந்த ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக, அந்தப் பொறுப்பில் இருந்தே மகேஷை நீக்கியுள்ளது. பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் நாச்சியப்பன் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். 


மேலும் படிக்க | பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன்


திமுக மற்றறும் பாஜக ஆகிய கட்சிகள் எலியும், பூனையுமாக பொதுத்தளத்தில் சண்டைப் போட்டாலும் பக்தி, சுயவளர்ச்சி என்னும்போது அந்தரங்கமாக கைக்கோர்த்துக் கொள்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்போது நமக்கொரு கேள்வி உண்டு. 4 மணி நேரம் சாமி தரிசனம் செய்யாமல் ஒரே இடத்தில் காத்துக்கொண்டிருந்த அந்த பக்தர்களுக்கு என்ன பதில் என்பதே.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ