பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன்

வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 3, 2022, 03:40 PM IST
  • 5ஜி ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு சென்றுள்ளது.
  • வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு.
பிரதமரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்காதீங்க - வானதி சீனிவாசன் title=

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதில் குறிப்பாக திமுக எம்.பி. ஆ.ராசா வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு தான் சென்றுள்ளது. ஏன் இவ்வளவு குறைவான விலைக்கு ஏலம் போனது? எஞ்சிய பணம் எங்கே சென்றது? என்று மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து இவ்விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனையடுத்து 5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடந்துள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி

பாஜக மகளிரணி சார்பில் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய கொடியை எந்தியவாறு விழிப்புணர்வு செய்ய உள்ளதாகவும், இந்த 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பல்வேறு கலைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை 5ஜி அலைக்கற்றை ஏலம் பெற்று தந்துள்ளது என்று கூறிய வானதி, இதுபற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்கு தான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று தெரியும் அதனால் தான் அவர் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.

அதுமட்டுமின்றி, இந்த அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது என்றும், இலக்கை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல் மத்திய அரசு சொல்லி தான் விலை ஏற்றம் நடைபெற்று வருகிறதா என்று கேள்வி எழுப்பிய வானதி, தேவையில்லாமல் மத்திய அரசை குறை சொல்ல கூடாது. மத்திய அரசு பல நல்ல விஷயங்களை சொல்லி உள்ளது அதற்கெல்லாம் மத்திய அரசை பாராட்டவில்லை. ஆனால் நீங்கள் விலை ஏற்றி விட்டு மத்திய அரசை சொல்ல கூடாது என்று கூறினார்.

மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு ‘திராவிட’ வகுப்பெடுத்த டி.ஆர்.பாலு!.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News