ஹெச்.ராஜா திண்டுக்கல் அருகே கைது
பழனி செல்ல இருந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருக்கும் இடும்பன் கோவில் பகுதியில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் காவல்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், காவல்துறையின் உத்தரவுக்கு எதிராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழனியை நோக்கி காரில் புறப்பட்டார்.
அவர் வரும் வழியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பழனி உட்கோட்ட எல்லையான சத்திரப்பட்டிக்கு வருகை தந்தபோது, ஹெச்.ராஜாவின் காரை மறித்து காவல்துறையினர் கைது செய்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஹெச்.ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மண்டபத்தை சுற்றி காவல்துறை குவித்து வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிவிட்டரிலும் ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார்.
அதில், "தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், கோவில் சார்ந்த விஷயங்களில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகிறார். அண்மையில் புந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
அதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கோவில் நிலத்தை எடுக்கக்கூடாது எனப் பேசினார். கோவில் நிலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனக் கூறிய அவர், தமிழக முதலமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இந்து கோவில்களை அழிப்பதற்கு முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR