மீண்டும் தலையெடுக்கும் ‘ரூட் தல’ பிரச்சனை - கைது நடவடிக்கையில் இறங்கிய சென்னை போலீஸ்.!

மீண்டும் ரூட் தல பிரச்சனை உருவெடுத்துள்ளதால் சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கை  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 18, 2022, 04:25 PM IST
  • மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் ரூட் தல பிரச்சனை
  • யார் எந்த ரூட்டில் கெத்து ? என மாணவர்கள் மோதல்
  • கைது நடவடிக்கையில் இறங்கிய சென்னை போலீஸார்
மீண்டும் தலையெடுக்கும் ‘ரூட் தல’ பிரச்சனை - கைது நடவடிக்கையில் இறங்கிய சென்னை போலீஸ்.!  title=

சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், நேற்று காலை அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

மேலும் படிக்க | பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு "கண்ணியம்" திட்டம் விரைவில் அமல்!

இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பூந்தமல்லியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி பூந்தமல்லி ரூட் தல மாணவர்களுக்கும், திருத்தணியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி திருத்தணி ரூட் தல மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.  இதில் எந்த ரூட்டு தல கெத்து? என்பதில் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. 

இரண்டு ரூட்டு தல கேங்கைச் சேர்ந்த மாணவர்களும் முதல் நாளே சண்டைக்கு திட்டமிட்டுள்ளனர் என்பதும் தெரிகிறது.
மேலும் சண்டையில் ஈடுபடுவதற்காக 8 பட்டாக் கத்திகள், இரண்டு பைகளில், காலி மது பாட்டில்கள், மற்றும் கற்களை மறைத்து வைத்திருந்ததும் வீடியோக்கள் மூலம் அறியவந்தன. 
இதனையடுத்து 8 பட்டாக் கத்திகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற கீழ்ப்பாக்கம் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த தகராறில் பூந்தமல்லி ரூட்டு தல மாணவர்கள், திருத்தணி ரூட் தல மாணவர்கள் மட்டுமல்லாமல் பெரம்பூர் ரூட்டு தல மாணவர்களும் இந்த பிரச்னையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

pattakathi

இந்த சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வரும் திருவள்ளூரை சேர்ந்த கிஷோர் (21), பூந்தமல்லி ரூட்டு தல கேங்கைச் சேர்ந்த பி.ஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வரும் நசரத்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார்(20) ஆகிய இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த ரூட்டு தல தாக்குதல் வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களையும் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ள இந்த ரூட் தல பிரச்சனை சமூக ஆர்வலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ரூட்டு தல : மாணவர்கள் பைகளில் பட்டா கத்திகள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News