தமிழகத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை இடிக்கவில்லை என்று மர்ம நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவை ஜனவரி மாதம் சவுதா மணி தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த பதிவு செய்து ‘தைரியமா? விடியலுக்கா?’என்று தனது கருத்தையும் பதிவு செய்து இருந்தார். இதுதொடர்பாக பாஜக செயற்குழு உறுப்பினரான சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சவுதாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 



ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் அப்போதைய நீதிமன்ற விசாரணைக்கு  காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், சவுதாமணி மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் அறிக்கையை சமர்ப்பித்து வாதிட்டார். அதில், சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை காவல்துறை திட்டவட்டமாக உறுதி செய்தது. 



மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே


அதன் காரணமாக அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிதாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின்னர், மீண்டும், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில், இன்று பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணியை சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்தனர். 


மேலும் படிக்க | பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? இந்த மூவருக்கு வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR