சென்னை:முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,077 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 73 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. 


 


READ | மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா பாதிப்பு...தற்போதைய நிலை என்ன?


தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா. வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 


READ | செஞ்சி DMK MLA மஸ்தானுக்கு கொரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி...


முன்னதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. இதேபோல் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.