மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா பாதிப்பு...தற்போதைய நிலை என்ன?

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jul 2, 2020, 03:30 PM IST
    1. உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா பாதிப்பு
    2. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    3. தமிழகத்தில் புதன்கிழமை அன்று 3,882 பேருக்கு புதிய கொரோனா வைரஸ்கள் தொற்று பதிவாகியுள்ளன
மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா பாதிப்பு...தற்போதைய நிலை என்ன? title=

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தோற்றுக்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் புதன்கிழமை அன்று 3,882 பேருக்கு புதிய கொரோனா வைரஸ்கள் தொற்று பதிவாகியுள்ளன, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கு அருகில் வந்துள்ளது. தொற்று காரணமாக மேலும் 63 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம், டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

 

READ| தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை..!

 

இந்நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

READ | செஞ்சி DMK MLA மஸ்தானுக்கு கொரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி...

 

இதனிடையே அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ . சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதும் உறுதியானது. தற்போது அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Trending News