நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் பலி . குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பல உயரதிகாரிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிரிழந்த நால்வரின் உடலும் கருகியிருப்பதால், இறந்தவர்களை இன்னும் அடையாளம் காணமுடியவில்லை. இந்த விபத்து குறித்து விமானப்படை, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விமானப்படையின் எம்.ஐ17 வி5 (MI17 V5) விமானத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பயணித்ததாக கூறப்படுகிறது. 



குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ உயரதிகாரிகளின் நிலை தெரியவில்லை. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு சென்றபோது விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  


இந்த விபத்து தொடர்பாக டிவிட்டரில் சமூக ஊடகப் பயனர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது...



தமிழகத்தின் கோயம்புத்தூர் மற்றும் சூலூர் இடையே விபத்துக்குள்ளான மி-சீரிஸ் ஹெலிகாப்டரில் ராணுவத்தலைவர் பிபின் ராவத்மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் இருந்ததாகவும் அஞ்சப்படுகிறது. விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகிலுள்ள தளங்களிலிருந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைத்துள்ள புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குவதாக  உள்ளன.


READ ALSO | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR