காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்த நிகழ்வில் குஷ்பு பாஜகவில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக தலைவர் செய்தி தொடர்பாளர், சம்வித் பாத்ரா, இதை முறையாக அறிவித்தார்.


அப்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடன் இருந்தார்.


அதே போல் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்தார்.


பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். இந்தியாவில் பல கோடிப் பேர் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.


பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆர்வமாக இருப்பதாகவும் பாஜகவில் சேர்ந்த பின்னர் குஷ்பு தெரிவித்தார்.


முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நடிகை குஷ்புவும் அவரது கணவர் சுந்தர். சியும் நேரில் சந்தித்தனர்.


காங்கிரஸ் கட்சியில் சேவை செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என கூறினார்.


முன்னதாக, பிரபல நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு கள நிலவரம் தெரியவில்லை என்றும், உண்மை நிலை தெரியாமல், உத்தரவுகளை இஷ்டத்திற்கு பிறப்பிக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.


ALSO READ | குஷ்பு சோனியாவிற்கு எழுதிய கடிதம்... பாஜகவில் இணைவது உறுதியா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe