தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் தற்போது காலியாக உள்ளது.  அந்தவகையில் இதில் ஒரு இடத்தில் மட்டும் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இந்த அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக (AIADMK) MP ஆக இருந்த முகமது ஜான் என்பவரின் மறைவுக்கு பிறகு அவரது அந்த இடம் காலியானது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் (TN Assembly Election) ராஜ்யசபா எம்.பி.,க்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அவர்கள் தங்களது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராஜ்யசபாவில் (Rajya Sabha) காலி இடங்கள் 3 ஆக அதிகரித்தது.


ALSO READ | TN Assembly தேர்தல் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் – முன்னாள் அமைச்சர் அதிரடி


இதையொட்டி இந்த மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் முகமது ஜான் மறைவால் காலியாக உள்ள இடத்திற்கு மட்டும் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 24 ஆம் தொடங்ககி ஆகஸ்ட் 31 தேதி வரை நடைபெறும். அதேசமயம் வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 1 ஆம் தேதியும், வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 3 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் செப்டம்பர் 13 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், முடிவுகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


ALSO READ | நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கையூட்டிய அண்ணன்கள் EPS, OPS-க்கு நன்றி: வேலுமணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR