TN Assembly தேர்தல் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் – முன்னாள் அமைச்சர் அதிரடி

முன்னாள் அமைச்சர் சண்முகம் கட்சித் தொண்டர்களிடையே தேர்தல் தோல்வி குறித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவே தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சாடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2021, 01:33 PM IST
  • தேர்தல் தோல்விக்கு பஜகவுடனான கூட்டணியே காரணம் அதிமுக
  • கட்சித் தொண்டர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வே சண்முகம் கருத்து
  • பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம்-ஆதங்கம்
TN Assembly தேர்தல் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் – முன்னாள் அமைச்சர் அதிரடி title=

அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் மாநிலத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியே, சிறுபான்மை வாக்கு வங்கியையும் இழந்துவிட்டோம் என முன்னாள் மாநில அமைச்சரும், அதிமுக தலைவருமான சி வே சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது அதிமுகவிலும், பாரதிய ஜனதா கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் சண்முகம், இதற்கு முன்பும் இதுபோல் அதிரடியாக பேசியவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்சிக் கூட்டத்தில் பேசியபோது, தனது கட்சியின் தலைவர்களையே அவர் குறைகூறியிருந்தார். 

‘அதிமுகவின் தொண்டர்கள் எங்கும் செல்லாமல் உறுதியாக நமது கட்சியிலேயே உள்ளனர்.ஆனால் அதிமுக தலைவர்கள் சிலர் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும் கட்சிக்கு திரும்புகின்றனர்’ என்றார். அமைச்சரின் இப்பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

 Also Read | முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க் கிழமையன்று(06-07-2021) வனூரில் நடந்த கட்சித் தொழிலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக தலைவர் சண்முகம், பாஜகவுடனான கூட்டணியின் காரணமாக அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை கணிசமாக இழந்தது என்று கூறினார்.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைப் (Villupuram Assembly constituency) பற்றி குறிப்பிட்ட அவர், சட்டமன்றத் தொகுதியில் சுமார் 20,000 சிறுபான்மையின வாக்காளர்கள் உள்ளனர். விழுப்புரம் நகரில் மட்டும் 18,000 பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்த வாக்காளர்கள். ஆனால், பாஜகவுடனான கூட்டணி காரணமாக கட்சி சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவை இழந்தது என்று முன்னாள் அமைச்சர் ஆதங்கப்பட்டார். 

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட அவர், “மக்களும் அதிமுக அரசே என்று விரும்பினார்கள். ஆனால், கூட்டணி மற்றும் சிறுபான்மை வாக்குகள் உள்ளிட்ட காரணிகளின் கலவையால் அனைத்து கணக்கீடுகளும் தவறாகிவிட்டன” என்று தெரிவித்தார்.

“அதிமுகவின் கூட்டணி பாஜக இல்லாமல் மாறுபட்டிருந்தால் திமுக (DMK) இன்று ஆட்சியில் இருந்திருக்காது. அவர்கள் தற்செயலாக ஆட்சிக்கு வந்திருந்தாலும், அது ஒரு கூட்டணி அரசாங்கமாக (coalition government) மட்டுமே இருந்திருக்கும் ” என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

திமுகவுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் கட்சித் தொண்டர்களை சி.வே. சண்முகம் கேட்டுக் கொண்டார்.  

Also Read | சதுரகிரி மலை செல்ல தடை; வனதுறை உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News