Hathras Case: உ.பி. பெண்ணிற்கு நீதி கோரி கனிமொழி தலைமையில் Candle Light March!!
உத்தரபிரதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு பொதுவாக ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தி.மு.க மகளிர் பிரிவு, அதன் தலைவி கனிமொழி தலைமையில் திங்களன்று ராஜ் பவனை நோக்கி மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்தவுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் சிலரால் தாக்கப்பட்டு உயிர் இழந்த 19 வயது பெண்ணுக்கு நீதி கோரி இந்த ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் அது இன்னும் உறுதிபடுத்தப் படவில்லை.
உத்தரபிரதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு பொதுவாக ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார். "ஊடகங்களும் பாதுகாப்பின் பற்றாக்குறையை உணர்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் மையத்திற்கு கடமை உள்ளது" என்று ஸ்டாலின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ALSO READ: Hathras Case: தலித் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை CBI விசாரிக்க CM யோகி உத்தரவு!!
"இதை வலியுறுத்தி ராஜ் பவனுக்கு அணிவகுப்பு நடத்த திமுக மகளிர் பிரிவு திட்டமிட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். மக்களவை எம்.பி. கனிமொழி (Kanimozhi) போராட்டத்திற்கு தலைமை தாங்குவார். ஹத்ராஸ் தலித் பெண் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரும் மெழுகுவர்த்தி அணிவகுப்பை (Candle Light March) மேற்கொள்ள கட்சியின் பெண் தொண்டர்கள் ஒன்று கூடுவார்கள் என்றும் மு.க. ஸ்டாலின் (MK Stalin) மேலும் தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் ஹத்ராஸுக்கு செல்வதைத் தடுத்ததற்காகவும், அப்போது நடந்த கைகலப்பில் ராகுல் காந்தி வீழ்ந்ததற்காகவும் உ.பி. காவல்துறையினரை சாடிய ஸ்டாலின், "உத்தர பிரதேச அரசு தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மேலும் உ.பி. அரசு ராகுல் காந்தியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உத்தர பிரதேச அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என்றும் கூறினார்.
திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் இந்த கோரிக்கையையும் வலியுறுத்தும் என்றார் அவர்.
ALSO READ: “அவங்கள Public-கா சுடுங்க”: Hathras Gangrape Case குறித்து Twitter-ல் கங்கணா!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR