கூகுள் மேப்பை பார்த்து பயணம்; கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார்!
Viral video: திருக்கோவிலூரில் கூகுள் மேப்பை பார்த்தவாறு பயணம் செய்த நபர், கழிவு நீர் வாய்க்காலில் காரை இறக்கி உள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று இரவு கூகுள் மேப் உதவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: தொட்டதற்கெல்லாம் லஞ்சம்.. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குவிந்த பொதுமக்கள்
இந்நிலையில், கோவிலில் இருந்து நேராக சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் திரும்பி செல்ல கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம் மெயின் ரோட்டில் செல்வதற்கு பதிலாக தென்பெண்ணை ஆற்றலுக்கு செல்லும் குறுகிய சாலையில் கூகுள் மேப்பை பார்த்தவாரே சென்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறக்கி உள்ளது.