சிறுவன் மீது மது போதையில் தாக்குதல்... தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் - நடந்தது என்ன?
Tamil Nadu Latest News Updates: சிறுவர் உட்பட 2 பேரை பிரபல பாடகர் மகன்களும், அவரின் மூன்று நண்பர்களும் சேர்ந்து மது போதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இங்கு காணலாம்.
Tamil Nadu Latest News Updates: மது போதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக பிரபல பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மனோ மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட பாடகர் மனோவின் இரண்டு மகன்களும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் தனது மகன்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாக பாடகர் மனோவின் மனைவி ஜமிலா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் தானும் தனது மகன்களும் தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
நடந்தது என்ன?
மனோ மனைவி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர், "நான் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவேன். என்னுடைய எதிர்காலம் கனவு எல்லாமே கால்பந்து விளையாட்டுதான். நாங்கள் வழக்கமாக விளையாடும் மைதானத்தில் மழை பெய்து தண்ணீர் தேங்கியதை தொடர்ந்து, கட்டண மைதானத்திற்கு (Football Turf) சென்று விளையாடினோம்.
மேலும் படிக்க | சென்னை : மின்தடை எப்போது சீராகும்? மின்வாரிய அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம்
அங்குதான் எதிர்பாராத விதமாக இந்த சண்டை ஏற்பட்டு விட்டது. இதனால், நான் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விட்டது, பல வாய்ப்புகளை இழந்துவிட்டேன். சிறு வயது முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். ஆனால் ஒரே நாளில் எல்லாம் கைநழுவி போய்விட்டது.
நான் அவர்களை தாக்கியதாக கூறுகிறார்கள். 16 வயது சிறுவனாகிய எனக்கு கவனம் முழுவதும் விளையாட்டின் மீதுதான் இருந்தது. சண்டை போடுவதில் எனக்கு விருப்பமில்லை. அவர்கள் என்னை தாக்கும் போது கூட நான் எனது உடலை தற்காத்துக்கொள்ள தான் முற்பட்டேனே தவிர பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை" என்று குறிப்பிட்டார்.
'பாழான எதிர்காலம்'
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் பயிற்சியாளர் கூறுகையில்,"எங்கள் பகுதியில் இருக்கும் சிறுவர்கள் அனைவரையும் தவறான பழக்கத்தில் இருந்து மீட்டு விளையாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். சம்பவம் நடந்த அன்று எங்கள் மைதானத்தில் மழை பெய்து தண்ணீர் தேங்கி இருந்தது. அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த கட்டண மைதானத்திற்கு சென்று விளையாடி விட்டு வந்தோம். அடுத்த நாள் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியும் இருந்தது. இந்த நிலையில் தான் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனின் எதிர்காலமே பாழாகிவிட்டது" என்றார்.
அந்தச் சிறுவனின் தந்தை கூறுகையில், "அடிக்கும் போது கூட என் மகன் என்னைக் காப்பாற்றுங்கள் கத்தவில்லை. மாறாக அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்றுதான் கேட்டுள்ளான். அந்த நிலையிலும் அவன் தாக்கியவர்களை அண்ணன்களாகதான் பார்த்துள்ளான். அப்படி இருந்தும் அவனை கடுமையாக தாக்கி உள்ளனர். அதைதான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏன் தலைமறைவாக இருக்கிறார்கள்...?
ஒரு வருடமாக கால்பந்து போட்டிக்கு தயாராகி வந்தான். இப்போது என் மகனின் எதிர்காலம் என்ன ஆவது? தாக்கியதற்காக நான் உங்களிடம் காசு, பணம் கேட்கவில்லை. என் மகன் தவறு செய்திருந்தால் பிடித்து வைத்துக் கொண்டு பெற்றோர்களாகிய எங்களை வரச் சொல்ல வேண்டியது தானே. அப்படி இல்லை என்றால் போலீசாரிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே. அப்படி செய்யாமல் நாடகம் நடத்துகிறார்கள்.
எனது மகனை அடித்தது தவறு தான் என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் போதும். தவறு செய்யவில்லை என்றால் மனோவின் மகன்களை ஏன் மறைத்து வைத்துள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை எனக் கூறுகிறார்கள். பின்னர் எப்படி அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பரிசோதனை செய்தனர்" என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேலும் படிக்க | Shocking Video: மாணவிகளின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் நபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ