மாட்டிறைச்சி தடை எதிர்ப்பு: சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுகறி திருவிழா
மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள்.
இறைச்சிக்காக பசு, காளை, கன்று, ஒட்டகம் விற்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
மேலும் மாட்டிறைச்சி தடைக்கு ஏதிராக தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை வித்தித்தற்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுகறி திருவிழா நடைப்பெற்றது. இந்த விழாவில் 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.