காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 177.2 டி.எம்.சி காவிரி நீரை (Cauvery River) வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்க்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சியும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சியும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.


பிலிகுண்டுலு பகுதியில் உரிய நீர் வருவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் எனவும் கூறியிருந்தார். நடப்பு மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகம் வந்துள்ள சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. 


ALSO READ | காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: PMK


இந்நிலையில் தற்போது காணொளியில் இன்று நடக்கவிருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்சினை நீடிக்கும் நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் இந்த கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பாகவும் தமிழக அரசு விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR