மீண்டும் தலை தூக்கும் 2019 ‘Cash for Vote ’ மோசடி:திமுக-வினர், வங்கி அதிகாரி மீது வழக்கு!!
வழக்கு தொடர்பான சில ஆவணங்களை புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்ததாக அந்த நிறுவன வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கு (Lok Sabha Elections) முன்னதாக, வேலூரில், சுமார் 11.48 கோடி ரூபாய் வருமான வரித் துறையால் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டாளர் உட்பட ஒரு மூத்த வங்கி அதிகாரி மற்றும் இரண்டு பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (CBI) வழக்கு பதிவு செய்துள்ளது.
மூவரின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்ததாக அந்த நிறுவன வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
சில நாட்களுக்கு முன்பு, CBI-ன் ஊழல் தடுப்பு கிளை வேலூரில் (Vellore) உள்ள கனரா வங்கியின் அப்போதைய மூத்த மேலாளர் தயாநிதி, திமுக செயல்பாட்டாளர் 'பூஞ்சோலை' சீனிவாசன், அவரது சகோதரர் தாமோதரன் மற்றும் பலர் மீது புதிதாக அச்சிடப்பட்ட பல 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. பிரிவு 120 (பி) (குற்றச் சதி), 420 (மோசடி), 477 (ஏ) (கணக்குகளை பொய்மைப்படுத்துதல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 இன் பிற விதிகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2019 அன்று வேலூரில் உள்ள திரு.தாமோதரனின் வளாகத்தில் வருமான வரித் துறை தேடுதல் நடத்தியதாகவும், 11.48 கோடி ரூபாய் அப்போது பறிமுதல் செய்யபட்டதாகவும் நம்பகமான தகவல்கள் கிடைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது, திரு. சீனிவாசன் அந்த பணம் தனக்கு சொந்தமானது என்றும், தேர்தலுக்கு முன்னதாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவே அதை வைத்துள்ளதாகவும் கூறினார்.
பணம் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, ஐபிசி மற்றும் மக்கள் பிரதிநிதிச் சட்டத்தின் விதிகளின் கீழ் டி.கதிர் ஆனந்த் (D.Kathir Anand) (மூத்த திமுக தலைவர் துரைமுருகனின் மகனும், வேட்பாளரும்) மீது வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வங்கி மேலாளர் திரு. தயாநிதி தனது உத்தியோகபூர்வ நிலையை தவறாகப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். இதனால் இவரும் குற்றத்திற்கு ஆளாகிறார்.
சிபிஐக்கு ஒரு முறையான குறிப்பில், மூத்த மேலாளர் சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் வங்கியில் ரூபாய் நோட்டுகளை பரிமாற்றியதாக வங்கி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வியாழக்கிழமை மூவரின் வீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைப் பற்றி எதுவும் கூறாத சிபிஐ அதிகாரி ஒருவர், விசாரணைக்கு விரைவில் அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்த வழக்கில் எம்.பி.யின் பங்கு குறித்தும், அவர் விசாரிக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் அதிகாரிகள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.
ALSO READ: இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக நிபுணர்கள் அவசியம்: Modi-க்கு EPS கடிதம்!!