17:34 21-08-2019
உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்காததால், அவர் விரைவில் விசாரணைக்கு ஆஜாராகுவர் என சிபிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அவரின் வீட்டில் ஒட்டிய நோட்டீஸ்க்கு இன்னும் ப.சிதம்பரம் தரப்பில் பதில் அளிக்கவில்லை. எனவே அவர் சிபிஐ அலுவலகத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16:51 21-08-2019
இன்று காலையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்தில் காத்திருக்கிறார்கள். ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெறாத நிலையில், அவரை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



16:23 21-08-2019
ஒருவேளை தலைமை நீதிபதியிடம் ஆலோசனை செய்ய முடியாத சூழல் ஏற்ப்பட்டால், ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீதான வழக்கு பட்டியிலிடப்பட்ட பிறகு, நாளை விசாரணைக்கு வரலாம்.



16:20 21-08-2019
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கலைந்து சென்றதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள்



16:11 21-08-2019
அயோத்தி வழக்கை குறித்து இன்றைய விசாரணை முடிந்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கலைந்து சென்றுள்ளது. ஆனால் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் காத்திருக்கின்றனர்.



14:45 21-08-2019
ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடத்த முடியாது. அந்த மனு பட்டியலிடப்பட்ட பிறகே விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளதை அடுத்து, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்துள்ளது.



புதுடெல்லி: ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடத்த முடியாது. பட்டியலிடப்பட்ட பிறகே ப.சிதம்பரம் மனு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறியது.


இந்தநிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் வந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கோரினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், உணவு இடைவேளைக்கு பிறகு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்தார். மேலும் ப.சிதம்பரம் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடத்த முடியாது. ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பிறகே விசாரிக்கப்படும் எனவும், மனுவில் உள்ள பிழைகளை சரி செய்யுமாறும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.