கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து, மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள எக்ஸ்எஓஎம்ஐ (XAOMI)டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடட் என்னும் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து வைத்திருந்த செல்போன்களை அனுப்ப திட்டமிட்டிருந்தனர். அதன்படி, திட்டமிட்ட அக்டோபர் 21ஆம் தேதி சரிபார்க்கப்பட்ட 15 பெட்டிகளில் (தலா 928) சுமார் 13 ஆயிரத்து 920 எண்ணிக்கை கொண்ட ரூ.15கோடி மதிப்பிலான செல்போன்கள் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


வழக்கம்போல செல்லும் சாலையில் பயணத்தை முடிவு செய்தார்கள். ஒரு இரவில் எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் அடுத்த மேலுமலை அருகே சென்றுக்கொண்டிருக்கும் போது வடமாநில கொள்ளையர்கள் பலர் கண்டெய்னர் லாரி சுற்றி வளைத்தனர். அதிகாலை 2 மணி இருக்கும் ஆள்நடமாட்டம் என்பது அரவே இல்லை. அதை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி ஓட்டுநர்களை தாக்கி லாரியை கடத்தி சென்றனர்.



பின்னர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி நிறுத்திவிட்டு கண்டெய்னர் கதவுகளை உடைத்தவர்களின் கையில் உள்ளே இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் சிக்கியது. பின்னர் அதை மாற்று லாரி மூலமாக கடத்தி சென்றனர். எல்லாம் முடிந்த பிறகு சூறையாடியவர்கள் அங்கிருந்து குழு குழுவாக திசை மாறி சென்றனர். 



இதனையடுத்து திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்க, வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. தமிழக தனிப்படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய பிரதேசம் சென்று 2021 ல் 13பேரை கைது செய்தனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.



முதற்கட்ட விசாரணையில் மொத்தம் 28 பேர் கொள்ளையர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர்,தமிழக போலிசாரால் கைது செய்யப்பட்ட 13பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். 


மேலும் படிக்க | CRIME : தந்தையை கொன்று புதைத்து மகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை



இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் பியூரா சவுகான், சஞ்சய்,நியான் சிங், முகேஸ் சவுகான் ஆகிய 4 பேர் பிடிபட்டு ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்கள் வேறு பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற ஆஜருக்கு பின் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நாட்டையே அதிர வைத்த கொள்ளை சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நீடித்து வருகிறது.


மேலும் படிக்க | நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR