ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் -கனிமொழி!
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்றும், பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்றும், பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்., மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக பதவியேற்றதில் இருந்து, நாட்டையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீர் விவகாரம், முத்தலாக் என பல்வேறு சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், தற்போது இதன் ஒரு பகுதியாக மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை பறிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது என குற்றஞ்சாட்டினார்.
பாஜக அரசின் திட்டத்தை, திமுகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்க்கிறார்கள் என தெரிவித்த அவர்., விரைவில் தமிழக மக்கள் மூலம் மத்திய அரசு பாடம் கற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., தமிழை வைத்து திமுக வியாபாரம் செய்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியது ஏற்புடையது அல்ல., அதிமுகவின் சரித்திரம் தெரிந்திருந்தால் ஜெயக்குமார் இப்படி பேசியிருக்க மாட்டார் என தெரிவித்தார்.