நீலகிரியில் சிக்கியது சிறுத்தை... உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம்!
Nilgiri Cheetah Issue: நீலகிரி மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி உள்பட இரண்டு பேரை கொன்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
Nilgiri Cheetah Issue: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் நேற்று சிறுத்தை தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. 20 மணி நேரத்தை கடந்தும், தேவாலா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனால் கேரள மாநிலம் செல்லக்கூடிய போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள்
ஒவ்வொரு நாளும் மனிதர்களை சிறுத்தை தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுவரை சிறுத்தை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். டிச. 21ஆம் தேதி ஏலமன்னா கிராமத்தில் அடுத்தடுத்து 3 பெண்களை தாக்கியபோதில் இருந்தே தொடர் போராட்டங்கள் நடந்து வந்தது.
சிறுத்தையை பிடிக்க முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து பொம்மன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. மேலும், நேற்று இரவு வனத்துறையினர் சிறுத்தைக்கு ஒரு டோஸ் மயக்க மருந்து செலுத்தியும் சிறுத்தை தப்பித்தது.
சிக்கியது சிறுத்தை
இந்த நிலையில் மீண்டும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். தேயிலை தோட்டம் புதருக்குள் சிறுத்தை மறைந்திருந்து தாக்கி வருவதால் கும்கி யானை உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளான ஏலமன்னா மேங்கோரேஞ்ச் பகுதிகளில் கும்கி யானை உதவியுடன் தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது, மேங்கோரேஞ்ச் ஆம்ப்ரஸ் பகுதியில் காணப்பட்ட சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்டப்டது. உடனடியாக சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். தற்போது அந்த சிறுத்தை முதுமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ரூ.10 லட்சம் நிவாரணம்
முன்னதாக, சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு நிவாரணத்தொகையையும் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 29) கடந்த டிச. 29ஆம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 3 1/2) என்பவர் கடந்த ஜன.6ஆம் தேதி அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு! எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ