Chennai AC local train Update : சென்னை தினசரி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஏசி ரயில் பெட்டிகள் கொண்ட லோக்கல் ரயில் சேவை வர இருக்கிறது. அரக்கோணம், செங்கல்பட்டு செல்லும் வழித்தடங்களில் ஏதேனும் ஒரு வழித்தடத்தில் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இருப்பினும் எந்த வழித்தடம் என்பதை EMU சென்னை நிர்வாகம் அறிவிக்கவில்லை. ஆனால் இப்போதே எங்கள் வழித்தடத்தில் தான் முதல் ஏசி ரயில் சேவையை தொடங்க வேண்டும் என செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் ஏசி ரயில் : சென்னை லோக்கல் ரயிலில் மட்டும் தினசரி 11 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை உண்மையான பயணிகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவாக தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை -வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் லோக்கல் ரயில் ஸ்டேஷன் - அரக்கோணம், சென்னை கடற்கரை டூ கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் லோக்கல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் அரக்கோணம் மற்றும் தாம்பரம் ரயில் மார்க்கங்கள் எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்தவையாக இருக்கின்றன. இந்த வழித்தடங்களில் ஏசி ரயில் சேவை இயக்க வேண்டும் என மக்களிடையே நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.


மேலும் படிக்க | Ration shop | ரேஷன் கடை மீது புகார் அளிக்க இந்த எண்ணுக்கு SMS தட்டிவிடுங்க


ஐசிஎப் தயாரித்த ஏசி ரயில் : இந்த கோரிக்கையின் அடிப்படையில் சென்னையில் இருக்கும் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐசிஎப்-ல் இப்போது லோக்கல் ஏசி ரயில் தயாரித்து ரெடியாக இருக்கிறது. அதில் ஒன்று மேற்கு ரயில்வேக்கு செல்லும் நிலையில் இன்னொரு ரயில் சென்னையில் இயக்கப்பட இருக்கிறது. டிசம்பர் மாதம் முதல் லோக்கல் ஏசி ரயில் சேவையை தொடங்க இப்போது திட்டமிட்டப்பட்டுள்ளது. எந்த வழித்தடம் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பயணிகளைப் பொறுத்தவரை எப்போதும் தாம்பரம் மார்க்கத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் இம்முறை அரக்கோணம் மார்க்கத்தில் ஏசி ரயில் சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


டிக்கெட் விலை எவ்வளவு? : சென்னையில் இயக்கப்பட இருக்கும் லோக்கல் ஏசி ரயில் சேவைக்கு இன்னும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போது, 5 ரூபாய், அதிகபட்சம் 10 ரூபாய் கொடுத்து மக்கள் லோக்கல் ரயிலில் பயணிக்கின்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் ரயில் சேவையாக EMU சென்னை இருப்பதால், இந்த கட்டணம் மக்களை லோக்கல் ரயில் சேவையை நோக்கி ஈர்க்கிறது. முக்கியமான நேரங்களில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அதில் கட்டணம் கூடுதல் என்பதால் பெரும்பாலும் மெட்ரோ ரயிலை தவிர்த்துவிட்டு லோக்கல் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால், ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையிலேயே டிக்கெட் கட்டணமும் இருக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். 


சென்னை பொதுப்போக்குவரத்து : சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதற்கேற்ப லோக்கல் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை, கட்டணமில்லா பேருந்துகளை அரசு இயக்கிக் கொண்டிருக்கிறது. கூடுதலாக புதிய ஊர்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. லோக்கல் ரயிலில் ஏசி பெட்டிகள் வந்தால், மக்கள் இன்னும் அதிகமாக ரயில் போக்குவரத்துக்கு திரும்புவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். டிக்கெட் விலை மட்டும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டும் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ் அறிவிப்பு - தமிழ்நாடு ரேசன் கடை ஊழியர்கள் குஷி... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ