Ration shop | ரேஷன் கடை மீது புகார் அளிக்க இந்த எண்ணுக்கு SMS தட்டிவிடுங்க

Ration shop complaint, Tamil Nadu | ரேஷன் கடையில் பொருள் இருந்தும் உங்களுக்கு தரப்படவில்லை என்றால் ஒரே ஒரு எஸ்எம்ஸ் மூலம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 20, 2024, 02:56 PM IST
  • ரேஷன் கடை மீது புகார் அளிக்க வேண்டுமா?
  • உங்கள் கையில் மொபைல் இருந்தால் போதும்
  • இந்த எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்ஸ் அனுப்புங்க
Ration shop | ரேஷன் கடையில் பொருள் இருந்தும் வழங்கப்படவில்லையா? இந்த எண்ணுக்கு SMS தட்டிவிடுங்க  title=

Ration shop complaint, Tamil Nadu News | தமிழ்நாட்டில் சுமார் 2 கோடிக்கும் மேலாக ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றன. சில லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டு ரேஷன் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. பயனாளர்கள் வகைப்படுத்தப்படுவதற்கு ஏற்ப ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ரேஷன் கார்டை தவிர மற்ற எல்லா கார்டுதாரர்களும் எல்லா பொருட்களும் கிடைக்காது. அவை எந்த வகை கார்டுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கார்டு வகைகள் : 

முன்னுரிமை அட்டைகள் (PHH) - சர்க்கரையை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் கிடைக்கும்

அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) - 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்

முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH) - அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்

சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S) - அரிசியை தவிர சர்க்கரை உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்

பொருளில்லா அட்டை (NPHH-NC) - எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

ரேஷன் கடையில் கொடுக்கப்படும் பொருட்கள் : 

தமிழ்நாடு ரேஷன் கடைகளைப் பொறுத்தவரை மக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்படுகிறன்றன. இதுதவிர பொங்கல் பண்டிகை தினத்தின்போது அரசு அறிவிக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

ரேஷன் கடை மீது புகார் அளிக்க வேண்டுமா?

இருப்பினும் சில ரேஷன் கடைகளில் தவறுகள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக விநியோக்கிப்படவில்லை என்றால் அங்கிருந்தவாறே நீங்கள் ஒரு எஸ்எம்ஸ் மூலம் புகார் அளிக்கலாம். அதற்கு முன்பு, ரேஷன் கடையில் இப்போது இருப்பு இருக்கும் பொருட்களின் நிலவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு

ரேஷன் கடையில் இருப்பு உள்ள பொருட்களின் நிலவரம் : 

உங்கள் மொபைலில் இருந்து 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கீழ் உள்ளவாறு டைப் செய்து அனுப்பவும். இந்த எஸ்எம்ஸ் மூலம் பொருட்களின் இருப்பு, கடை திறந்துள்ளதா இல்லையா? என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

PDS <இடைவெளி> 101 - நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
PDS <இடைவெளி> 102 - நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது)
PDS <இடைவெளி> 107 - கட்டண தொகை பற்றிய புகாருக்கு

அதனை தெரிந்து கொண்ட பிறகு அதே எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் உங்களின் புகாரை பதிவு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் நுகர் பொருள் வாணிப கழகத்தின் அதிகாரப்பூர்வ இணயதளப்பக்கத்துக்கும் சென்று ரேஷன் கடை தொடர்பாக உங்களுக்கு இருக்கும் புகாரை உரிய சான்றுகளுடன் பதிவு செய்யலாம். விற்பனையாளரின் நடத்தை அல்லது வேறு ஏதேனும் புகார் இருந்தால் கூட பயனாளியான நீங்கள் பதிவு செய்ய முடியும்.

மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News