சென்னையில் பொதுமக்கள் கண்முன்னே பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை - 3 பேர் கைது!
பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக PSO எனப்படும் காவலர் ஒருவரை காவல்துறை அவருக்கு வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றுள்ளார்.
அங்கு பாலசந்தர் நின்று அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரின் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளது.
மேலும் படிக்க | சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு; விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை பாலசந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மறுத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்து கொலையாளிகளின் தடயம் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளர்.
தனிப்படை காவல் துறையினர் கொலை செய்தவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருகின்ற நிலையில் பி.எஸ்.ஓ மற்றும் மக்கள் நிறைந்த பகுதிகளின் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்
இந்நிலையில், பாஜக பிரமுகரான பாலசந்தர் கொலைக்கு காரணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் நடத்திய விசாரணையில், முன் விரோதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரிய வருந்துள்ளது. மேலும், இறந்துபோன பாலசந்தர் மீது 8 வழக்குகள் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர்களை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR