’அதிசயம்.. ஆனால் உண்மை’ இளையராஜா பாடலில் மாயமான புற்றுநோய் வலி..! Video
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் ஒருவர், வலியை தாங்கிக் கொள்ள இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடியவாறு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் சீதாலஷ்மி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தரமணியில் இருக்கும் அப்போலோ தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைந்துள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அறுவை சிகிச்சைக்குக்கு ஒப்புக்கொண்ட அவருக்கு, அண்மையில் அறுவை சிகிச்சை நடத்துள்ளது.
ALSO READ | தத்துக்கொடுத்த பெண் திரும்பி வந்தார்: திக்குமுக்காடிப் போன தாய், பாசத்தில் திளைத்த மகள்
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து சீதாலக்ஷ்மி வீடு திரும்பிய நிலையில், மருத்துவமனை சார்பாக அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், புற்றுநோயில் இருந்து குணமடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், தரமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறினார்.
ALSO READ | கொலையில் முடிந்த வாய்த்தகராறு! கணவரே மனைவியை கொன்ற விபரீதம்!
" எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். புற்றுநோய் பாதித்தபோது என்னால் வாய் திறந்து கூட பேச முடியாது. பின்னர் அறுவை சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டனர். வலியை எப்படி தாங்குவது? என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் வலியை தாங்கிக் கொள்ள என்னை பாடல் பாடச் சென்னார்கள்.
நான் பாடல் ஆசிரியராக இருந்ததால், இசைஞானி இளையராஜாவின் ‘கற்பூர பொம்மை’ பாடலை பாடினேன். உலகத்திலேயே புற்றுநோய் அறுவை சிகிச்சையின்போது பாடல் பாடியவாறு சிகிச்சை எடுத்துக் கொண்ட முதல் பெண் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது" என சீதாலக்ஷ்மி தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR