சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகளில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்ட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.


இதற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் ஒப்புதல் அளித்தார்.  இந்நிலையில் தற்போது சென்ட்ரல் ரயில் நிலைய வளாகம் மற்றும் நடைமேடைகளில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளது.



அதேப்போல் ரயில் டிக்கெட்டுகளிலும் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் என அச்சிடப்பட்டு கொடுக்கப்படுகிறது.


ரயில் நிலைய கட்டிடத்திலும் எம்.ஜி.ஆரின் பெயர் பலகையை பெரிய அளவில் வைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் பெயர் பலைகை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.