சென்னை: சில நாட்களாக பதுங்கியிருந்த கொரோனா தொற்று மீண்டும் முழு வீரியத்துடன் பாயத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இதை கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல வித கட்டுப்பாடுகளை நேற்று தமிழக அரசு அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் (Coronavirus) தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது. பலவித அபராத தொகையை விதித்து மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம். 


பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம். 


ALSO READ: முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்


முகக்கவசம் (Facemask) அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.


தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் 500 ரூபாய் அபராதம்.


 உடற்பயிற்சி மையங்கள், பொது இடங்கள், முடி திருத்தும் இடங்கள் ஆகியவற்றில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம்.


அபராதம் வசூலிக்க இலக்கு:


சென்னை மண்டலத்தில், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணாநகர் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வசூலிக்க இலக்கு.


கோடம்பாக்கம் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 1.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு. 


தேனாம்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு.


முன்னதாக, முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என  தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் டீசல் வாங்குவது அத்தியாவசியமான ஒரு விஷயமாக இருப்பதால், இதை காரணம் காட்டி முகக்கவசம் அணியும் வழக்கத்தை கட்டாயப்படுத்த வணிகர் சங்கம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ALSO READ: தமிழகத்தில் மீண்டும் லாக்டௌனா? மிரட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் பீதி!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR