தமிழகத்தில் மீண்டும் லாக்டௌனா? மிரட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் பீதி!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 17 பேர் உயிர் இழந்துள்ளார்கள். இதனுடன் சேர்த்து, மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2021, 09:55 AM IST
  • தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மட்டும் 3,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழத்தில் மீண்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படக்கூடும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் லாக்டௌனா? மிரட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் பீதி!!  title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி செயல்முறை மிக மும்முரமாக நடந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம், தொற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை பல மாநிலங்களில் முந்தைய அளவுகளை பின்னுக்குத் தள்ளி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் ஒற்றை நாள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளும் பொதுக்கூட்டங்களும் நடந்துவந்த நிலையில், மக்களிடையே வஞ்சனையில்லாமல் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கக் கூடும் என்ற பீதி அதிகாரிகளை வாட்டி வதைக்கிறது. 

இந்த அச்சத்தை உறுதி செய்யும் விதத்தில், தமிழகத்தின் (Tamil Nadu) பல்வேறு மாவட்டங்களில் நேற்று மட்டும் 3,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9.11 லட்சமாக அதிகரித்துள்ளது.

ALSO READ: திகிலைக் கிளப்பும் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) நேற்று மட்டும் 17 பேர் உயிர் இழந்துள்ளார்கள். இதனுடன் சேர்த்து, மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது.

 நேற்று தொற்றிலிருந்து 1,824 பேர் குணமாகியுள்ளனர். இதனுடன் மொத்தத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8.7 லட்சமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் நாட்டில் திடீரென அதிகரித்திருக்கும் கொரோனா தொற்று பற்றி கலந்துரையாட இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில மற்று யூனியன் பிரதேச முதல்வர்களுடன் இன்று ஒரு முக்கிய சந்திப்பை நடத்தவுள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு தமிழத்தில் மீண்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்படக்கூடும் என கூறப்படுகிறது.

எதற்கெல்லாம் தடை இருக்கக்கூடும்?

நீச்சல் குளங்கள், கடற்கரை, பூங்காக்கள், மதம், கலாச்சார, அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்வுகள், ஆகியவற்றுக்கு தடை இருக்கலாம் என கூறப்படுகின்றது. சினிமா அரங்குகள் இயங்காமல் போகலாம், அல்லது பல நிபந்தனைகளுடன் இயங்கக்கூடும்.

எவை வழக்கம் போல் இயங்கும்?

பேருந்து சேவைகள், ரயில் சேவைகள் ஆகிய அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் இருக்கும். அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். எனினும், அவரவர் பணி நிலையைப் பொறுத்து வீட்டிலிருந்து பணியார்களை வேலை செய்ய அலுவலகங்கள் அனுமதிக்கலாம். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில நிபந்தனைகள் விதிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டிப்பாக கண்காணிக்கப்படும்:

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதும் இன்னும் தீவிரமாக கண்காணிக்கப்படும். மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். தேவையற்ற பயணங்கள், கூட்டம் சேர்ப்பது, தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது ஆகியவை கடுமையாக கண்காணிக்கப்பட்டு மீறுபவர்களுக்கு தகுந்த அபராதமும் விதிக்கப்படும்.

கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டு போகவில்லை. இன்னும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாம் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.  

ALSO READ: மீண்டும் இரவு நேர ஊரடங்கு: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் Metro train, bus சேவைகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News