சென்னை: 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி விட்டு விலை உயர்ந்த கேடிஎம் பைக், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் பர்ஸில் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பால கங்காதர தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் வேளச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்ரமணா மற்றும் சந்துரு ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் ஆகிய மூன்று நபர்களை தாக்கி விட்டு, அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த கேடிஎம் பைக் மற்றும் 4 கிராம் தங்கச் சங்கிலி ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியதில் ரமணாவிற்கு தலையில் வீக்கமும் இடது கன்னத்தில் மற்றும் இடுப்பில் சிராய்ப்பு காயமும் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் குமாருக்கு தலையில் வீக்கம் காயம் முதுகில் ரத்த காயம் மற்றும் சந்துருவிற்கு இடது கண் மற்றும் தலையில் வீக்கம் காயம் ஏற்பட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். பின்பு காவல் நிலையம் சென்று தங்களது பைக் தங்க சங்கிலி பணம் பறிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல், தீபாவளியன்று தாம்பரத்தில் காவலரின் மாமியார் வீட்டில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள், திடீரென காவலரின் மாமியார், மச்சான் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த காவலரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளுக்கும் காவலரின் மாமியார் குடும்பத்துக்கும் ஏற்கனவே முன் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனை மனதில் வைத்து போதை ஆசாமிகள் திட்டமிட்டு தீபாவளியன்று தகராறு செய்து அடிதடியில் ஈடுப்பட்டனர். இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா புழக்கம் மற்றும் மதுபோதையில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இதுபோன்ற குற்றச் சம்பவங்களும் அதிகரிப்பதாக பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. பள்ளி கல்லூரி இளைஞர்கள் பெருமளவு கஞ்சாவுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதாகவும் குற்றச் சாட்டியுள்ளனர்.
மேலும் படிக்க | பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ