கடந்த 18ஆம் தேதி இரவு சென்னை புரசைவாக்கம் அருகே காவலர்கள் சிலர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதை தடுத்து சோதனை மேற்கொண்ட காவலர்கள், ஆட்டோவில் வந்த விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்று இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்த விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மீனவ கிராமமான பட்டினபாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான விக்னேஷ், சென்னை மெரினா கடற்கரையில் குதிரையை வைத்து வேடிக்கை காண்பித்தும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை அதில் ஏற்றி அழைத்துச் சென்றும் தனது அன்றாட வாழ்கையை கடத்தி வந்துள்ளார். இவர் தனது நண்பர் சுரேஷுடன் கடந்த 18ஆம் தேதி இரவு புரசைவாக்கம் சாலை வழியாக ஆட்டோவில் சென்றதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் மோகம் : தந்தை திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய எட்டாம் வகுப்பு மாணவி


அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த  தலைமை செயலக குடியிருப்பு காவல்துறை அதிகாரிகள் ஆட்டோவை மறிந்து சோதனை செய்ததாகவும், விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இருவருமே கஞ்சா போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அன்று இரவு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அன்று காலை விக்னேஷூக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறி போலீஸார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்துள்ளார். போலீஸ் தரப்பில் வலிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உறவினர்கள் விக்னேஷ்-க்கு வலிப்பு போன்ற எந்த உடல்நிலை பிரச்சனைகளும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல விக்னேஷ் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 



மேலும் படிக்க  | ‘சைக்கோ கணவனால்’ கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மனைவி..!


சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம்போல் சென்னையில் அரங்கேறியிருக்கும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கம்யூனிஸ் கட்சி சார்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், விக்னேஷின் உடலை கூட காவலர்கள் உறவினர்களிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகளின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்தும், வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 


இது ஒரு பக்கம் இருக்க, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் எப்படி உயிரிழந்தார் அவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன என்பது குறித்து இதுவரை உண்மையான எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னை  ஜி-5 காவல் நிலையத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், தலைமைக் காவலர் பொன்ராஜ், மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி : குட்டையில் மூழ்கி பலியான சோகம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR