அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு  வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தன்னை அவதூறு செய்ததாகவும், புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த பிரபல யூடியூபர் ஜோ மைக்கே பிரவீனுக்கு எதிராக அப்சரா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கின் தீர்ப்பு இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


திருநங்கைகள் சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்களைப் பற்றி, தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்கள் திருநங்கைகளின் உணர்வுகளை பாதிக்காத வகையிலும் கண்ணியமாக இருக்கும் வகையிலும் வழிநடத்த கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். 


தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அப்சரா ரெட்டி, "இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தவறான பதிவுகள் குறித்து தான் எப்போதும் மௌனமாக இருக்கமுடியாது என்றும், நீதி வேண்டி நீதிமன்றங்களை நாடியதால் சரியான தீர்வு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். 


தவறான எண்ணங்களையும் வெறுப்புணர்வையும் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதுபோன்ற செயல்கள் மனிதாபிமானமற்றது என்றும் கூறிய அப்சரா ரெட்டி, மேலும் தான் இத்தோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்றும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்றும், அப்படி இன்னலுக்குள்ளாகும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு என்றுமே துணை நிற்பேன்" என்றும் உறுதியளித்தார்.


நீதிபதி என்.சதீஷ்குமார் வழங்கிய இந்த சிறப்பான தீர்ப்பிற்கு தான் தலை வணங்குவதாகவும் அப்சரா ரெட்டி குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | “தாலாட்டுப்பாடி கொலை செய்தேன்” பெங்களூரு தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்!


யார் இந்த அப்சரா ரெட்டி?


தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை அரசியல்வாதிகளில் முக்கியமானவரான அப்சரா ரெட்டி, பத்திரிகையாளரும் சமூக ஆர்வலரும அவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்த இவர் 2018ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பிறகு, மகிளா காங்கிரஸின் முதல் திருநங்கை பொதுச்செயலாளர் என்ற பெருமையைப் பெற்றார். பிறகு அவர், அதிமுகவுக்குத் திரும்பிவிட்டார்.  


யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன், பெண்களைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் வெளியிட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார். 


அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அப்சரா ரெட்டி மற்றும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் அளித்த புகாரில், சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி இழிவாக பேசும் ஜோ மைக்கேல் பிரவீன், அதேபோல் அவதூறு வீடியோக்களையும் பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரையும் இழிவாக பேசுவதாகவும் ஜோ மைக்கேல் பிரவீன் மீது புகார் எழுந்தது.


இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணைக்காக இரண்டு முறை சம்மன் கொடுத்தபோதும் ஜோ மைக்கேல் ஒருமுறை கூட செல்லவில்லை என்பதால், அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தபோது பெண் காவலர்களை ஜோ மைக்கேல் பிரவீன் தரக்குறைவாக பேசியுள்ளார்.


எனவே, மானத்துக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில்  அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கல் பிரவீனை கைது சிறைக்கு அனுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பெங்களூர் சிஇஓ சுசனா சேத் மகனை கொன்றது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ