விக்ரம் படத்தை இணையத்தில் வெளியிட தடை
கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் இடம்பெற்றுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
மேலும் படிக்க | ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்: முன்னாள் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்தநிலையில் வருகின்ற ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ள விக்ரம் திரைபடத்தினை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இணையத்தில் வெளியிட எந்த அனுமதியும் பட தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை.
அனுமதியின்றி படம் வெளியானல் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும், இது போன்ற அனுமதியின்றி படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே சட்டவிரோதமாக 1308 இணையத்தில் வெளியிட உள்ளதால் இவற்றிக்கு தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல், ஏர் டெல், ஜீயோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி சி. சரவணன், விக்ரம் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜீயோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க | 29c-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR