சென்னை மாநகராட்சியை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம்!
2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
சென்னை: சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சென்னை மாநகராட்சியிடம் சரமாரியாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சென்னை மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரில் இறப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தனர்.
கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. காணும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகரம் பாதி தண்ணீரில் மூழ்கி உள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மீட்பு பணிகள் ஈடுபட்டு வருகிறது. அவசர உதவி எண்கள், உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகிறது.
இந்நிலையில், சாலைகளை அகலப்படுத்தும் போது கழிவு நீர் வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் போன்றவை உரிய முறையில் அமைக்கப்படுவதில்லை எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த அந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ALSO READ | LIVE: தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை, அல்லல்படும் மக்கள்
2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
சென்னை மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரில் இறப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தனர். மேலும் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இன்னும் ஒருவாரத்துக்குள் நிலைமை சரியாகாவிட்டால் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
ALSO READ | கொட்டித்தீர்க்கும் மழை, விண்ணைத் தொடும் காய்கறி விலை: அல்லல்படும் மக்கள்
தமிழகத்தில் பெய்து வரும் அதிகன மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 538 குடிசைகள் சேதமடைந்துள்ளன, 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மழை தீவிரம் அடைந்தால் அதிக சேதம் ஏற்படும் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், இன்று மழை குறைந்துள்ளதால் சென்னை மாநகராட்சி தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், ராணுவம், NDRF, TN Fire மற்றும் பல அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில், மறுஆய்வு மற்றும் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
ALSO READ | செல்பி மோகத்தால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்; தேடும் பணி தீவிரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR