கொட்டித்தீர்க்கும் மழை, விண்ணைத் தொடும் காய்கறி விலை: அல்லல்படும் மக்கள்

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு வளாகத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 9, 2021, 10:39 AM IST
கொட்டித்தீர்க்கும் மழை, விண்ணைத் தொடும் காய்கறி விலை: அல்லல்படும் மக்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காசியளிக்கின்றன. கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிஉள்ளார்கள். 

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிக அளவில் உயரத் தொடங்கியுள்ளன. இதில் முக்கியமானவை மக்களுக்கு மிக இன்றியமையாதவையாக இருக்கும் காய்கறிகள்!!

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு வளாகத்தில் காய்கறிகளின் (Vegetables) விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை இருமடங்கு உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.60, பீன்ஸ் ரூ.70 , கேரட் ரூ. 90 , பீட்ரூட் ரூ. 40 , கத்தரிக்காய் ரூ.60 ரூபாய் என விற்பனையாகின்றன.

ALSO READ: மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 80 ரூபாய், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கனமழையைத் தொடர்ந்து, வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வியாழக்கிழமை (நவம்பர் 11) வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும் அழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, நவம்பர் 11-ஆம் தேதிக்குள் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும்.

மழையால் (Rain) சாலைகள் வெள்ளக்கடாக காணப்படுவதோடு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மிகக்குறைந்த தெளிவுத்திறன், போக்குவரத்தில் இடையூறு, கட்டமைப்புகளுக்கு சேதம், நிலச்சரிவுகள் / மண்சரிவுகள், பயிர்களுக்கு சேதம் ஆகியவை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: தமிழகத்தில் கனமழை: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் உறுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News